*தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது*
*தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம்*
*இந்நிலையில் ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டது*
*தற்போது ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது*
*இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது.
*அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது*
*இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
அரசாணை எண்: 148 ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்.
அரசாணை எண்: 148 ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்.
அரசானை தெளிவுரை கடிதம் பெற கிளிக் செய்யவும்.